ராக்கி பாய்யின் KGF-3..?!இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே.!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் திரைப்படம் கேஜிஎப் 1 இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தையும் இயக்குனர் பிரசாத் நீர் இயக்கியுள்ளார்.இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் கேஜிஎஃப் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் பயங்கரமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் கே ஜி எஃப் 2 படத்தின் இறுதிக்காட்சியில் கேஜிஎஃப் 3 பாகம் உருவாவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர் இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.