கொரோனா நோயாளிகளின் மனஅழுத்தத்தை மாற்றுவதற்காக  ரோபோ சங்கர் செய்த செயல் .!

கொரோனா நோயாளிகளின் மனஅழுத்தத்தை மாற்றுவதற்காக  ரோபோ சங்கர் செய்த செயல் .!

கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்ற ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் இணைந்து பல குரல்களில் பேசி நோயாளிகளை குஷிப்படுத்தி சிரிக்க வைத்துள்ளனர்

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் இதிலிருந்து மீண்டும் வருகின்றனர். கொரோனா பாதிப்பின் அறிகுறி இருப்பினும் சிலர் தனிமைப்படுத்தலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருப்பதும் , மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்வதும், சிலர் தப்பி செல்வதும் போன்ற விபரீதங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வரும் நோயாளிகளின் மனஅழுத்தத்தை மாற்ற பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்பாடு செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காமெடி நடிகரான ரோபோ சங்கரும், திண்டுக்கல் செந்திலும் இணைந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் பட்டுகோட்டையில் உள்ள கொரோனாவிக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்துள்ளனர். அங்கு இருவரும் இணைந்து பல குரலில் பேசி நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்றி குஷிப்படுத்தி சிரிக்க வைத்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளை அ‌வ்வ‌ப்போது நடத்த வேண்டும் என்றும், நோயாளிகளை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர ஒதுக்க கூடாது என்றும் கூறியுள்ளார். தற்போது நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்றி குஷிப்படுத்திய ரோபோ சங்கரின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube