அதிகரிக்கும் கொரோனா..தமிழகத்தை முந்தி இரண்டாவது இடத்தில் ஆந்திரா.!

கொரோனா தொற்றில் ஆந்திரா தமிழகத்தை முந்தியது, இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பால் புதிதாக 79,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது மருத்துவமனைகளில் 781,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக இந்தியாவில் இதுவரை 3,619,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 64,617 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 10,603 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், ஆந்திரா தமிழகத்தை முந்தி மகாராஷ்டிராவுக்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவது இடத்தில மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக உள்ளது.

ஆந்திராவில் கொரோனா எண்ணிக்கை 3,884 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் தற்போது 99,129 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,21,754 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.