காலமானார் முன்னால் சட்ட அமைச்சர்… இந்நாள் சட்ட அமைச்சர் டுவிட்டரில் இரங்கல்…

இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்தியாவின்  முன்னால் மத்திய சட்ட அமைச்சரும் கர்நாடக முன்னாள் கவர்னருமான ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் உடல்நல குறைவு காரணமாக புதுடில்லியில் காலமானார். அவருக்கு வயது 82.வ்ஹன்ஸ்ராஜ்பரத்வாஜ்  ராகுல்காந்தி  காங்கிரஸ் கட்சியின்  தலைவராக ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது அரசியல் பயணம்:

  • கடந்த 1992-96-ல் சட்டத்துறை இணை அமைச்சராகவும்
  • 2004 முதல் 2009 ம் ஆண்டு வரையில் மத்திய சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
  • மேலும் 2009-14 ம் ஆண்டுகளில் கர்நாடக மாநில கவர்னராகவும் பணியாற்றி உள்ளார்.

இரங்கல்:

முன்னால் சட்ட அமைச்சர் பரத்வாஜின் மறைவுக்கு தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் பரத்வாஜின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், அவரது ஆன்மா அமைதியுடன் இருக்கட்டும் என்று  பதிவிட்டுள்ளார்.

author avatar
Kaliraj