மகாராஷ்டிரா மாநிலத்தில் கேரளா ஸ்டோரி படத்தினால் கலவரம் வெடித்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி எனும் பாலிவுட் திரைப்படமானது ஹிந்தி, தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கேரளா ஸ்டோரி படத்தினால் கலவரம் ஏற்பட்டது. அப்படத்தை பற்றி சமூக வலைதளத்தில் சர்ச்சையான கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த பதிவை எதிர்த்து ஒரு கும்பல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது எதிர் தரப்பினரும் அங்கே வந்ததால் அது மோதலாக மாறியது. இதில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. 13 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார்.

இதற்கிடையில், இப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிட மறுத்துவிட்டனர். இந்த தடைகளை எதிர்த்து தி கேரளா ஸ்டோரி படத்தயாரிப்பு நிறுவனம்உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இதன் பின், இரு மாநிலங்களும் விளக்கம் அளித்தது. இரு மாநில விளக்கங்களையும் அடுத்து இன்று தி கேரளா ஸ்டோரி திரைப்பட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.