ரூ.15,000 வரை விலையை அதிகரித்த பிரபல எலக்ட்ரிக் பைக் நிறுவனம்!

எலக்ட்ரிக் பைக் நிறுவனமான ரிவோல்ட், அதன் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ரக எலக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.15,000 வரை உயர்த்தியுள்ளது.

ரிவோல்ட், கடந்த 2019 ஆம் ஆண்டில் தனது புதிய ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ரக எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்குகள், இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், அதன் விலையை கடந்த பிப்ரவரி மாதம் உயர்த்தியுள்ளது. அப்பொழுது ஆர்வி300-ன் விலை, ரூ.84,999 எனவும், ஆர்வி400-ன் விலை ரூ.1,03,999 என விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் ரிவோல்ட் நிறுவனம், மீண்டும் இந்த பைக்குகளில்ன் விலையை ரூ.15,000 வரை உயர்த்தியுள்ளது. அதன்படி ரிவோல்ட் ஆர்வி300 பைக்கின் விலை ரூ.10,000 அதிகரிக்கப்பட்டு ரூ.94,999-க்கு விற்பனை செய்ய்யப்பட்டு வருவதாகவும், ரிவோல்ட் ஆர்வி400 பைக்கின் விலை ரூ.15,000 வரை உயர்த்தப்பட்டு ரூ.1.19 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி ரிவோல்ட் நிறுவனம், இந்த பைக்குகள் முன்பதிவு தொகையையும் அதிகரித்துள்ளது. அந்தவகையில், ஆர்வி300-ன் முன்பதிவு தொகை, ரூ.2,199-ல் இருந்து ரூ.7,199 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஆர்வி400 பைக்கின் விலை ரூ.3,999-ல் இருந்து ரூ.7,999 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.