முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள்  நீதிபதி கர்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

சக நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம்.இந்த வழக்கின் விசாரணையில் கொல்கத்தாவில் உள்ள சிறையில் 6 மாதங்கள் அடைக்கப்பட்டார்.

பின்பு கடந்த 2-ஆம் தேதி நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் நீதிபதி கர்ணன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.இதன் பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார் கர்ணன்.

இதனிடையே  சிறையில் அடைக்கப்பட்ட கர்ணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவரை சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.