டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வரலாற்றில் முதல்முறையாக பதவி நீக்க தீர்மானம்!

அமெரிக்கா வரலாற்றிலேயே பதவி நீக்க தீர்மானத்தின் அடிப்படையில் முதன் முறையாக அதிபர் டிரம்ப்புக்கு பதவி நீக்கம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், இந்த தேர்தலில் நான் தான் ஜெயிப்பேன் என டிரம்ப் கூறி வந்ததால், அவரது தோல்வியை அவர் தற்பொழுது வரையிலும் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

இந்நிலையில், வருகின்ற 20 ஆம் தேதி டிரம்ப்பின் பதவி காலம் முடிவடைவதுடன் அன்றைய தினத்தில் ஜோ பைடன் பதவியேற்க இருந்தார். ஆனால்,  கடந்த 6 ஆம் தேதி அவரது டிரம்ப்பின் ஆதரவாளர்களை நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து, 5 பேர் உயிரிழந்தனர். டிரம்ப் மெது வன்முறை செய்ய தூண்டியதாக இந்த நிகழ்வினால் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், இன்று அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக டிரம்ப் மீது இரண்டாம் தரமாக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

author avatar
Rebekal