முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் திரும்பி அனுப்பிய நிலையில், அரசாணை வெளியிட தமிழக அரசு முடிவு.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் திரும்பி அனுப்பிய நிலையில், அரசாணை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமிக்கு மது விலக்கு, ஆயத்தீர்வை துறை கூடுதலாக வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் விளக்கம் கேட்டு திரும்பி அனுப்பினார்.
அதுமட்டுமில்லாமல், கடிதத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை ஏன் குறிப்பிடவில்லை எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். முதல்வரின் பரிந்துரை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு, அரசியல் தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரிடமிருந்து துறைகள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகாவிட்டால், முதலமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசு சார்பாக அரசாணை வெளியிட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.