ரிப்பீட் எல்லாம் ஸ்டாப்பு, ஒரிஜினல் இப்போ ஸ்டாட்டு.!புதிய அத்தியாயங்களுடன் மீண்டும் வரும் விஜய் டிவி தொடர்கள்.!

ரிப்பீட் எல்லாம் ஸ்டாப்பு, ஒரிஜினல் இப்போ ஸ்டாட்டு.!புதிய அத்தியாயங்களுடன் மீண்டும் வரும் விஜய் டிவி தொடர்கள்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் புதிய அத்தியாயங்கள் வரும் ஜூலை 27ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் உள்ள இல்லத்தரசிகளுக்கு சீரியல்கள் என்றாலே மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் சீரியல்கள் எதுவும் ஓடவில்லை. சமீபத்தில் தமிழக அரசு 60பேருடன் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சீரியல் படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி வழங்கியது. ஆனால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜூலை 8ம் தேதி மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பழைய சீரியல்களையும், பழைய பார்டுகளையும் ஒளிப்பரப்பு செய்து வந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் புதிய அத்தியாயங்கள் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் புதிய பொலிவுடன் ஜூலை 27ம் தேதி முதல் சீரியல்களை தொடங்கவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் அறிவித்துள்ளது. அதில் "ரிப்பீட் எல்லாம் ஸ்டாப்பு, ஒரிஜினல் இப்போ ஸ்டாட்டு" என்ற பதிவுடன் மௌனராகம், பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட அனைத்து தொடர்களும் ஜூலை 27முதல் ஆரம்பமாகும் என்று தெரிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!
மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!
கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட  9 மசோதாக்கள் நிறைவேற்றம்
எஸ்.பி.பி யின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.!