காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாநிலங்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதன் மீதான குரல் வாக்கெடுப்பில் மசோதாவிற்குஆதரவாக 125 பெரும் வாக்குகளும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர்.

இந்த நிலையில் இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.
இந்த விவாதத்திற்கு பின்னர் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.மசோதாவுக்கு ஆதரவாக 351 பேரும், எதிராக 72 பேரும் வாக்களித்தனர்.இறுதியாக காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.