நிதிச்சுமையை குறைக்க தமிழக அரசு பல்வேறு செலவின கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், நீக்கம்.
கொரோனா காலத்தில் செலவினங்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு விதித்த தடைகள் நீக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தின்போது நிதிச்சுமையை குறைக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
நிதி பற்றாக்குறை நிலைமை தற்போது படிப்படியாக சீரடைந்து வருவதால் கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் அரசுமுறை பயணமாக விமானத்தில் செல்ல அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு. அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினப்படியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டது.