மதுரையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கியது..!

மதுரையில் உள்ள மதுரை அரசு மருத்துவ கல்லூரி நுழைவாயில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கியது.

கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்தை  மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ளமருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு 5 ஊருக்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், இன்று முதல் மதுரை அரசு மருத்துவ கல்லூரி நுழைவாயில் விற்பனை செய்யப்படுகிறது . தற்போது மதுரைக்கு 500 மருந்துகள் வந்துள்ளது. ஒருவருக்கு அதிகபட்சமாக 6 மருந்துகள் கொடுக்க அனுமதிக்கப்படுகிறது.

மருந்து வாங்க வருபவர்கள் மருத்துவர் பரிந்துரை கடிதம், சிடி ஸ்கேன் உடைய பிரதி மற்றும் ஆதார் அட்டை ஆகியவை எடுத்து வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 5 இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan