சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ரெம்டேசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது…!

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ரெம்டேசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் இந்த வைரஸின் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டேசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் மருந்தை வாங்குவதற்கு பெருமளவில் கூடி வந்தனர். இதனால் மருந்தை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து இன்று முதல் நேரு உள்விளையாட்டு அரங்கில் மருந்து விற்பனை மாற்றப்பட்டுள்ள நிலையில், காலை 9 மணி அளவில் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது. தினமும் 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரெம்டேசிவிர் மருந்து தட்டுப்பாடுகள் நிலவும்  நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்தி பலர் கள்ள சந்தைகளிலும் விற்பனை செய்கின்றனர். இதனையடுத்து, இடைத்தரகர்கள் யாரையும் மக்கள் தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.