கொரோனா நோயாளிகளுக்காக 100 டன் ஆக்சிஜனை இலவசமாக கொடுத்த ரிலையன்ஸ் நிறுவனம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொரோனா  நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதை அறிந்து 100 டன் ஆக்சிஜன் சிலிண்டரை இலவசமாக வழங்குவதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது மிகவும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவை இல்லாமல் திணறி வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலும் கொரோனாவின் பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் மகாராஷ்டிராவில் எவ்வித கட்டணமும் இன்றி 100 டன் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நகர அபிவிருத்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் இதை உறுதிப்படுத்தியுமுள்ளார். கொரோனாவிற்கு எதிரான போரில் முகேஷ் அம்பானி தனது நிறுவனம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செய்யும் இந்த உதவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தான் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal