28 C
Chennai
Monday, March 1, 2021

‘ஏலே’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!


8
/ 100


இயக்குனர் ஹலீதா ஷசிம் இயக்கத்தில் ஏலே என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் பிப்.12ம் தேதி தியேட்டரில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குனர் ஹலீதா ஷசிம் ‘பூவரசம் பிபி’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில், 2019-ம் ஆண்டு வெளியான சில்லுக் கருப்பட்டி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இவரது இயக்கத்தில் ஏலே என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியான நிலையில், இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பிப்.12ம் தேதி தியேட்டரில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Latest news

Related news