திருச்சி மத்திய சிறையில் காணொளி காட்சிகள் மூலம் கைதிகளை சந்திக்கும் உறவினர்கள்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா நோயானது, மற்ற நாடுகளிலும் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்க்கு முன்னெச்சரிக்கையாக இந்திய அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 1,400 சிறை கைதிகளின் உறவினர்கள் கூட்டம், கூட்டமாக சிறைக்கு வந்து செல்கின்றனர். கொரோன வைரஸ் தொற்றின் காரணமாக இதனை தவிர்க்க வரும் 14 தேதி வரை கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும், காணொலி காட்சி  மூலம்  உறவினர்களை சந்திக்க சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.