மீண்டும் இணையுமா பில்லா கூட்டணி.!

இந்த கூட்டணி இணைந்தால் கண்டிப்பாக பில்லா படம் போல கேங்ஸ்டர் படமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

நடிகர் அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார், தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார், மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இசையமைக்கிறார், மேலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிப்பதாகவும், காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார் இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து, அஜித் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்று சமுத்திக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது, அந்த வகையில் தற்பொழுது கிடைத்த தகவல், நீண்ட நாள் கழித்து விஷ்ணு வரதன் உடன் அஜித் இணையவுள்ளதாக தகவல்கள் செய்திகள் வெளியாகியுள்ளது, மேலும் இந்த கூட்டணி இணைந்தால் கண்டிப்பாக பில்லா படம் போல கேங்ஸ்டர் படமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.