சவுதியில் கொரோனா தடுப்பு மருந்துக்கான பதிவு தொடக்கம்!

கொரோனா தடுப்புமருந்து பயன்படுத்துவதற்கான பதிவினை சவுதி அரேபிய அரசு தொடங்கியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் பயன்படுத்த திட்டம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வைரசை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்புமருந்து பயன்படுத்துவதற்கான பதிவினை சவுதி அரேபிய அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, சவுதி அரேபிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாட்டுமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு குரோனா தடுப்பு மருந்தை செலுத்துவதற்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனாதடுப்பு மருந்து முதலில் செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.