#RedAlert: தமிழகத்தை நெருங்கும் மாண்டஸ்! 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் இன்று 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பிஅய்க்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை முதல் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 3 மணி நேரத்தில் தீவிர புயலாக இருக்கும் மாண்டஸ் சாதாரண புயலாக வலுவிழக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் போது 65 முதல் 85 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் எனவும் கூறியுள்ளது. சென்னையில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment