கேரளாவிற்கு “ரெட் அலர்ட்” இந்திய வானிலை ஆய்வு  மையம் தகவல்!

கேரளாவில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு  மையம் தெரிவித்து உள்ளது.குறிப்பாக இடுக்கி ,மலப்புரம் ,வயநாடு , கண்ணூர், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆறு மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் 204 மில்லி மீட்டர் அளவிற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு  மையம் தெரிவித்து உள்ளது.கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு முதல் மந்திரி பினராயி விஜயன் கேட்டு கொண்டு உள்ளார்.

கேரளா -லட்சத்தீவு இடையே 40-50 கி .மீ  வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

author avatar
murugan