இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் மீட்பு விகிதம் 63.02% ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை கடந்தது.

இந்தியாவின் கொரோனா தொற்று 9 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு புதிய கொரோனா தொற்று மற்றும் 553 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில்,  907,645 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  23,727 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும்,  572,112 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் மீட்பு விகிதம் 63.02% ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம், இறப்பு விகிதம் ஒப்பிடுகையில் 3.99% ஆக உள்ளது. மேலும் குணமானோர் விகிதம் 96.01% ஆக உள்ளது என மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.