அக்டோபரில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்க பரிந்துரை….!

அக்டோபரில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதிலும் கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார்.

இந்த கூட்டத்தில் பேசியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அறிக்கை தயாரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கியுள்ளார். இந்த அறிக்கையில் முதல்கட்டமாக 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், முதல்வரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்வர் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு இது குறித்து தெரிவிப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், மாணவர்களை பள்ளிக்கு வரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

author avatar
Rebekal