பெண் இனம் இருப்பது தெரியாமல் 41 ஆண்டுகள் காட்டுக்குள் வாழ்ந்த ரியல் டார்சான்..!

பெண் இனம் இருப்பது தெரியாமல் 41 ஆண்டுகள் காட்டுக்குள் வாழ்ந்த ரியல் டார்சான்..!

பெண் என்ற ஒரு இனம் இருப்பதே அறியாமல் 41 ஆண்டுகளாக காட்டிலேயே தனது வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் ஹோ வேன் லாங் என்ற ரியல் டார்சான்.

டார்சான் என்ற படத்தில் காட்டு மனிதன் ஒருவர் வாழ்நாளில் மிருகங்கள், மரம், செடி என இயற்கையோடு வாழ்ந்து வந்ததை பார்த்திருப்போம். ஆனால், உண்மையாகவே ஹோ வேன் லாங் ரியல் டார்சானாக வாழ்ந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஹோ வேன் லாங் வியட்நாமை சேர்ந்தவர். 1972  வியட்நாம் போரின் போது அமெரிக்கா நடத்திய குண்டுத்தாக்குதலில் லாங்கின் தாய் மற்றும் இரு சகோதரர்கள் இறந்துவிட்டனர். இதன் காரணத்தால் லாங்கின் தந்தை, இவரையும் இவரது சகோதரரையும் அழைத்து கொண்டு அங்கிருக்கும் குவாங் காய் மாகாணத்தின் டே ட்ரா என்ற காட்டுப்பகுதிக்குள் வாழ சென்றுள்ளார்.

பின்னர் நகரத்திற்கு திரும்பவே இல்லை. காட்டுக்குள் கிடைக்கும் பழங்கள், மலைத்தேன், காட்டு விலங்குகள் இவையே இவர்களின் உணவாக இருந்துள்ளது. கடந்த 40 வருடங்களில் 5 முறை மட்டுமே மனிதர்களை பார்த்துள்ளனர். அப்போதும் யார் கண்ணிலும் படாதவாறு ஒளிந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் புகைப்படக்கலைஞர் 2015 ஆம் ஆண்டில் ஹோ வேன் லாங்கின் குடும்பத்தை பார்த்துள்ளார். பின்னர் அவர்களை தேடி சென்று பேசி அந்த குடும்பத்தை கிராமத்திற்கு அழைத்து வந்து மக்களின் சாதாரண வாழ்க்கையை பழக்கப்படுத்தியுள்ளார்.

மேலும், ஹோ வேன் லாங்கிற்கு பெண் என்ற ஒரு இனம் இருப்பதே தெரியாது. கடந்த 41 வருடங்களாக காட்டிலேயே வாழ்க்கை இருந்து விட்டதால் எதுவும் தெரியவில்லை. தற்போது இவருக்கு 46 வயதாகிறது. இருந்தாலும், மனதளவில் ஒரு குழந்தையை போன்றவர். இவருக்கு அந்த புகைப்படக்கலைஞர் அல்வரோ செரிசோ மக்களின் வாழ்க்கை முறையை கற்றுக்கொடுத்துள்ளார். இது குறித்து ஹோ வேன் லாங், காட்டு வாழ்க்கை மிக அமைதியாக இருந்ததாக கூறியுள்ளார்.

இந்த உலகம் சத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இங்கு மனிதர்களோடு விலங்குகள் பழகுவதை ஆச்சர்யமாக உள்ளது என்றும், காட்டில் விலங்குகள் இவரை கண்டு அஞ்சி ஓடும் என்றும் கூறியுள்ளார்.

Join our channel google news Youtube