வேளாண் சட்டங்கள்: டிசம்பர் 29-ல் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- விவசாய அமைப்புகள்!

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 29 ஆம் தேதி மத்திய அரசுடன் விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளனர்.

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 31 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தியது.

ஆனால் அந்த பேச்சுவார்த்தை எதுவும் பலனிக்கவில்லை. 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடருவதாக விவசாயிகள் அமைப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 29 ஆம் தேதி மத்திய அரசுடன் டெல்லியில் போராடும் விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளனர்.