மாணவர் விடுதிகளை தரத் தயார்- அண்ணா பல்கலைக்கழகம்

விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க

By venu | Published: Jun 21, 2020 03:56 PM

விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைகழகம்  சம்மதம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் அதிகமாக சென்னையில் தான் பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் , கொரோனா மருத்துவ முகாம் அமைக்க குறிப்பிட்ட காலத்திற்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு  சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பியது.இந்நிலையில் விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைகழகம்  கடிதம் எழுதியுள்ளது.  மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதிகளை செய்யுமாறு மாநகராட்சிக்கு  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc