முக்குலத்தோர் புலிப்படை கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் – கருணாஸ் MLA

தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் என்று கருணாஸ் MLA தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் கூட்டணி குறித்து, திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய கருணாஸ், எங்கள் கட்சி எந்த அமைப்பிற்கும் ஜாதிக்கும் எதிரானவர்கள் அல்ல, அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது.

பாமக 20% இட ஒதுக்கீடு கேட்பது என்பது பிற சமூகத்தினரை வஞ்சிக்கும் செயல். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம். தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார். அதிமுகவிடம் இரண்டு தொகுதிகள் கேட்க உள்ளோம் என்றார். இதனிடையே, தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அதில் வெற்றி பெற்ற எம்எல்ஏவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்