பீஸ்ட் மூடுக்கு மாறிய விஜய் ரசிகர்கள்.! ரிங்க்டோன் மாற்றுவதற்கு ரெடியா.?!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான 2 பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது பீஸ்ட் படத்தின் மூன்றாவது தீம் பாடலான “BeastMode” என்ற பாடல் இன்று மாலை 6-மணிக்கு வெளியாகும் என சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் காலையில் அறிவித்திருந்தது.அந்த அறிவிப்பின் படி, தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய் -அனிருத் கூட்டணியில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற மாஸ்டர் தி பிளாஸ்டர் ரசிகர்களுக்கு மத்தியில் செம வரவேற்பை பெற்று அனைவரது ரிங் டோனாக மாறியது. இதனை தொடர்ந்து.தற்போது பீஸ்ட் படத்தின் பாடல் அதைவிட அருமையாக உள்ளதால் விஜய் ரசிகர்கள் அனைவரும் தங்களது ரிங் டோனாக வைத்துள்ளனர்.