டெல்லியில் மீண்டும் மோதல் – போக்குவரத்து நிறுத்தம்

டெல்லியில் மீண்டும் மோதல் – போக்குவரத்து நிறுத்தம்

  • டெல்லியில்  ஜஃப்ராபாத் பகுதியில் போலீசார் – போராட்டக்காரர்கள் இடையே மீண்டும் மோதல்  ஏற்பட்டுள்ளது. 
  • மோதலை தொடர்ந்து சீலம்பூர் முதல் ஜஃப்ராபாத் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய (Jamia Millia Islamia) பல்கலைகழக மாணவர்கள் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது மட்டும் அல்லாமல்,கண்ணீர் புகைக்குண்டு வீசினார்கள்.இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது.பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது.இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் போராட்டமாக வெடித்தது.இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவர்கள்,ஜாவகர்லால் நேரு  பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த போராட்டத்தில் சிறுது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதன்விளைவாக  போலீசார் – போராட்டக்காரர்கள்  இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். மோதலை தொடர்ந்து சீலம்பூர் முதல் ஜஃப்ராபாத் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சீலாம்பூர் மற்றும் கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

 

Join our channel google news Youtube