#RCB vs DC: டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலால் தள்ளிவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் போட்டியில் 2 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அதுவும் இன்று நாளில் ஒரே சமயத்தில் நடைபெற உள்ளது. ஒரே சமயத்தில் நடைபெறும் இந்த இரண்டு போட்டிகளும் இரு வெவ்வேறு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும்.

அதன்படி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் 56-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் பலப்பரீச்சை செய்கிறது.

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடித்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், டெல்லி அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:

விராட் கோலி (c), ஸ்ரீகர் பாரத் (wk), தேவதூத் படிக்கல், டேனியல் கிறிஸ்டியன், க்ளென் மேக்ஸ்வெல், AB டிவில்லியர்ஸ், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், ஜார்ஜ் கார்டன், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணி:

ரிஷப் பந்த் (c & wk), பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிபால் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிம்ரான் ஹெட்மியர், அக்சர் பட்டேல், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்