27 C
Chennai
Friday, October 22, 2021

#RCB v KKR: சுனில் நரைனிடம் சுருண்ட பெங்களூரு.. கொல்கத்தாவுக்கு 139 ரன்கள் இலக்கு!

இன்றைய எலிமினேட்டா் சுற்றில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டா் சுற்று போட்டியில் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மூன்றாவது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகிறது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க வீரர்களான தேவதூத் படிக்கல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலி 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சுனில் நரைன் பந்தில் போல்ட் ஆனார். இவரைத்தொடர்ந்து ஸ்ரீகர் பாரத், க்ளென் மேக்ஸ்வெல் நரைன் ஓவரில் கேட்ச் கொடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதுபோன்று, ஏபி டிவில்லியர்ஸ்-யும் நரைன் பந்தில் போல்ட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுக்க இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. கொல்கத்தா அணியில் சிறப்பாக பந்துவீசிய சுனில் நரைன் 4, பெர்குசன் 2  விக்கெட்டுகளை வீழ்த்துள்ளார். இந்த நிலையில் 139 ரன்கள் அடித்தால் கொல்கத்தா வெற்றி பெறும்.

spot_imgspot_img

Hot Topics

Read More