#IPL2021: பெங்களூர் அணி கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

கோலி தலைமையிலான பெங்களூர் அணி, சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் பந்தை வீசி முடிக்காத காரணத்தினால், ஐபிஎல் விதிமுறைப்படி ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர்.சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 62*, டு பிளெசிஸ் 50 ரன்கள் எடுத்தனர்.

அதனைதொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி, 9 விக்கெட்கள் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி, குறிப்பிட்ட நேரத்தில் பந்தை வீசி முடிக்காத காரணத்தினால், ஐபிஎல் விதிமுறைப்படி மெதுவாக பந்து வீசியதற்கு கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, மும்பை இந்தியன் கேப்டன் ரோகித் சர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மார்கன் ஆகியோர் மீது இதே நடவடிக்கைக்காக தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.