டி வில்லியர்ஸ் அதிரடி: பெங்களூரு ரன் குவிப்பு! சேஸ் செய்யுமா மும்பை!

15

மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி பெங்களூர் அணி வீரர்கள் களம் இறங்கினார்.

அந்த அணியின் பார்த்தீவ் பட்டேல் 20 பந்துகளுக்கு 28 ரன்னில் விராட் கோலி 8 ரன்களிலும் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து ஆடிய ஏபி டி வில்லியர்ஸ் 51 பந்துகளுக்கு 75 ரன்களும் மொயீன் அலி 32 பந்துகளில் 50 ரன்கள் விளாச 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 171 ரன் விளாசி உள்ளது. மும்பை அணியின் சார்பில் லஷித் மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.