பதவி காலம் முடிவதற்கு முன்னரே ராஜினாமா செய்த ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா

பதவி காலம் முடிவதற்கு முன்னரே ராஜினாமா செய்த ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்
2017 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி  இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக விரால் ஆச்சார்யா பதவி ஏற்றுக்கொண்டார். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலின் கீழ் 4 துணை ஆளுநர்கள் பணியாற்றுவார்கள்.அதில் ஒருவர் தான் விரால் ஆச்சார்யா.
சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தார்.உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்று கொண்டார்.
இந்த  நிலையில் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிய இன்னும் 6 மாதம் உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
 

Join our channel google news Youtube