baby

6 மாத குழந்தையை 50 முறைக்கும் மேல் கடித்த எலிகள்..! பெற்றோர் கைது..!

By

அமெரிக்காவில் இந்தியானாவில், 6 மாத குழந்தையை கடந்த வாரம் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த போது 50 தடவைகளுக்கு மேல் எலி கடித்துள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எவன்ஸ்வில்லி காவல் துறை இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

   
   

அதன்படி, அந்த குழந்தையின் பெற்றோரான டேவிட் மற்றும் ஏஞ்சல் ஸ்கோனாபாமை போலீசார் கைது செய்துள்ளார். போலிஸாரின் கூற்றுப்படி, அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, ​​​​அந்த 6 மாத குழந்தையின் தலை மற்றும் முகத்தில் 50 க்கும் மேற்பட்ட கடி காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் வலது கையில் இருந்த நான்கு விரல்கள் மற்றும் கட்டை விரலில் சதை இல்லாமல் இருந்தது. விரல் நுனியில் எலும்புகள் தெரிந்தது. ஒவ்வொரு விரலிலும் பாதி சதையைக் காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை எலி கடித்த நிலையில், குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Dinasuvadu Media @2023