ராட்டினம் விழுந்து விபத்து..! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 11 குழந்தைகள்..!
ராட்டினம் விழுந்து விபத்து..! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 11 குழந்தைகள்..!
கண்காட்சியில் ராட்டினம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 11 குழந்தைகள் உயிர் தப்பினர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடந்த கண்காட்சியில் ராட்டினம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 11 முதல் 15 குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர். அஜ்மீர் பேருந்து நிலையம் அருகே கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அந்த கண்காட்சியில் நன்றாக சுற்றிக்கொண்டிருந்த ராட்டினத்தின் கேபிள் திடீரென அறுந்து ராட்டினம் கீழே விழுந்துள்ளது.
இந்த விபத்தில் ராட்டினத்தில் அமர்ந்திருந்த 11 முதல் 15 குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்துக்குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியோடு ஜேஎல்என் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஊஞ்சல் ஆபரேட்டர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.