12.2 C
London
Tuesday, September 28, 2021

தெலுங்கில் உருவாகும் ராட்சசன் 2..! ஹீரோவாக மக்கள் செல்வன்..??

ராட்சசன் 2 தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல். 

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து இருந்தார் மேலும் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று ஒரு நல்ல வசூல் சாதனையையும் செய்தது மேலும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு சிறந்த வெற்றிப் படமாக இது திகழ்ந்தது.

ராட்சசன் 2 ஆம் பாகத்தை இயக்குனர் ராம்குமார் நடிகர் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு அடுத்ததாக ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் ராட்சசன் திரைப்படம்  தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் ரமேஷ் வர்மா இயக்கியிருந்தார்.  ஹீரோவாக பெல்லம்கொண்டா சீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழில் உருவாவதற்கு முன்பே ராட்சசன் திரைப்படம் தெலுங்கில் உருவாகவுள்ளதாகவும், இதில் இதில் ஹீரோவாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

Hot Topics

Read More