38 C
Chennai
Sunday, June 4, 2023

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை கருத்துக்கு மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா.!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், நடிகர் அர்ஜுன் நடித்த புஷ்பா என்ற தெலுங்கு படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லியின் பாத்திரம் பற்றி பேசியதை அடுத்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இதனை தொடர்ந்து, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் மேலாளர் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் ‘என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில்,எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும்.

எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்’என பதிலளித்தேன். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. ரஷ்மிகா மந்தானாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என தெரிவித்து கொண்டார்.

இந்நிலையில், ஐஸ்வர்யாவின் பதிலுக்கு பதிலளித்த ராஷ்மிகா, ஹாய் லவ்.. இப்பத்தான் இதை பார்த்தேன். விஷயம் என்னவென்றால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் நன்றாக புரிந்து கொண்டேன். மேலும், எங்களை விளக்குவதற்கு எங்களுக்கு எந்த காரணமும் இல்லை என்று நான் விரும்புகிறேன். உங்களுக்கு தெரியும், உங்கள் மீது அன்பும் மரியாதையும் மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் ஃபர்ஹானா காதல் படத்திற்கு மீண்டும் ஆல் தி பெஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.