ராம் சரணுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா..?

ஷங்கர்  இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக நடிகர் ராம் சரண் வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் மற்றொரு டாப் ஹீரோவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இந்த படத்தில் முதலில் பவன் கல்யாண் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்திருந்ததாகவும் ,தற்போது அந்த வேடத்தில் மற்றொரு டாப் நடிகர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு 5 மாதம் கழித்து தொடங்கவுள்ளது. மேலும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தமிழில் சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.