, ,

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்!

By

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 ண்டகளாக நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு.

   
   

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தங்கச்சிமடம் மீனவர்கள் 48 பேரையும், 10 விசைப்படகுகளையும் மீன்பிடி கலன்களுடன் இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 48 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 10 நாட்களாக நடந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஆட்சியர் சங்கர்லால் குமாவத் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மீனவர் சங்க பிரதிநிதிகளுடன்  ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023