பேருந்துகளில் டிக்கெட்டுக்கு பதிலாக பயணச்சீட்டு என்று கேளுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழை வளர்ப்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். அதில் ஒரு கோரிக்கையாக, தற்பொழுது பேருந்துகளின் நடத்துனர்களிடம், பேருந்துகளில் டிக்கெட், டிக்கெட் என்று பயணிகளிடம் கேட்பதற்கு பதிலாக பயணச்சீட்டு, பயணச்சீட்டு என்று கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
பேருந்துகளின் நடத்துனர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்: பேருந்துகளில் டிக்கெட், டிக்கெட் என்று பயணிகளிடம் கேட்பதற்கு மாறாக பயணச்சீட்டு, பயணச்சீட்டு என்று கேளுங்கள். சிறிய முயற்சி கூட பெரிய மாற்றங்களுக்கு வித்தாகக் கூடும். அன்னைத் தமிழுக்கு உ#தமிழைத்தேடிங்களாலும் சேவை செய்ய…
— Dr S RAMADOSS (@drramadoss) June 18, 2023
மேலும், தமிழை வளர்ப்பதற்கான இந்த சிறிய முயற்சி கூட பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அன்னைத் தமிழுக்கு உங்களாலும் சேவை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கடைகளின் பெயர்களும், பெயர் பலகைகளிலும் தமிழ் இருக்க வேண்டும் என பிரச்சாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.