32 C
Chennai
Saturday, October 23, 2021

ராம்விலாஸ் பஸ்வானின் உடல் முழு அரசு மரியாதையுடன்  தகனம்

மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் உடல் முழு அரசு மரியாதையுடன்  தகனம் செய்யப்பட்டது.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.இதனிடையே கடந்த 8 -ஆம் தேதி ராம்விலாஸ் பஸ்வான்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராம் விலாஸ் பஸ்வான் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இன்று பீகாரில்  நடைபெற்ற  இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், கிரிராஜ் சிங், நித்யானந்த் ராய், அஷ்வினி குமார் ,பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி,  உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

spot_imgspot_img

Hot Topics

Read More