ராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.!

ராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு நாளை பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

கொரோனா காரணமாக இந்த விழாவின் அழைப்பாளர் எண்ணிக்கையை 200-ல் இருந்து 170-ஆக குறைக்கப்பட்டுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர்  காணொலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது. எனக்கு மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள்  எனவும்,ராமர் கோயில் அமைப்பதற்காக தியாகங்கள் மேற்கொண்டு அனைவரையும், நன்றியுடன் நினைவு கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Latest Posts

சஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்...!
கொல்லும் அரசாக மாறியுள்ள அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டது - மு.க.ஸ்டாலின்!
மகாராஷ்டிராவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு...!
 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் - ஆந்திரா முதல்வர்!
இன்றைய முட்டை விலை...!
இந்தியாவில் ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?