நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் பிரமாண்ட திரையில் திரையிடப்பட்ட ராமர் கோவில் பூமி பூஜை படங்கள்.!

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் பிரமாண்ட திரையில் திரையிடப்பட்ட ராமர் கோவில் பூமி பூஜை படங்கள்.!

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் பிரமாண்ட திரையில் திரையிடப்பட்டது.

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலின் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் உற்சாகமாக கொண்டாடியதோடு, அயோத்திய நகரமே விழாக் காலம் பூண்டிருந்தது.

இந்த நிலையில் அயோத்தியில் நடைபெற்ற பூமி பூஜை விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் பிரமாண்ட திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. ஏஎன்ஜயில் வெளியாகிய அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Join our channel google news Youtube