இந்தியா தலைவணங்காது-எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!ராஜ்நாத் தடால்

நாம் யாருக்கும் தலை வணங்கமாட்டோம். யாரையும் நமக்கு தலை வணங்க வைப்பதும் நம்முடைய  நோக்கமுமல்ல என்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

இந்தியா-சீனா எல்லை பிரச்சினையானது தீர்வு எட்டப்படாத நிலையில்  எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார்.அவ்வாறு தாக்கல் செய்யும் போது எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் கேள்விகளுக்கு  ராஜ்நாத சிங் பதிலளித்து பேசியதாவது:

போரை தொடங்குவது நமது கைகளில் உள்ளது. ஆனால் அது எங்கு முடியும் என்பது நம்முடைய கைகளில் இல்லை. அமைதி சில சமயங்களில் சமரசத்திற்கு உட்படுத்தப்படுகிறது என்பது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.
நாங்கள் முன்பை விட மிகவும் வித்தியாசமானவர்கள் ஆனாலும் அமைதியை நிலைநாட்டுவதையே  குறிக்கோளாக  கொண்டு உள்ளோம்.
130 கோடி மக்களுக்கும் நான்சொல்லிகொள்வது என்னவென்றால் உங்களை வீழ்த்த விடமாட்டோம்.நாம் யாருக்கும் தலை வணங்கமாட்டோம்.  யாரையும் நமக்கு தலைவணங்க வைப்பதும் நமது நோக்கமல்ல என்றார்.
இதைத் தொடர்ந்து  முன்னாள் ராணுவ மந்திரியும், காங்கிரஸ் எதிர்க்கட்சி உறுப்பினருமான ஏகே அந்தோனி இந்திய வீரர்களின் ரோந்து பணியை சீன வீரர்கள் தடுத்தார்களா? என்ற கேள்வியை ராஜ்நாத் சிங்கிடம் எழுப்பினார்.அவருடைய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரோந்து அமைப்பு மிகவும் பாரம்பரியமிக்கது மட்டுமின்றி மிகவும் நெறிப்படுத்தப்பட்டது.
இந்திய வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது  என்று ஆவேசமாக தெரிவித்தார்.
author avatar
kavitha