தேசிய மாணவர் படை விரிவாக்க திட்டத்திற்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்..!

சுதந்திர தினவிழாவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, பல திட்டங்கள் குறித்தும், கொரோனா காலத்தில் அமல்படுத்திய திட்டங்கள் குறித்தும் பேசினார். அப்போது, தேசிய மாணவர் படையை (NCC) விரிவாக்குவது குறித்து பேசினார்.

அதில், கடலோரம், எல்லைப் பகுதியை ஒட்டி 173 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டங்கள் நமது கடல் எல்லையிலும்,  சில மாவட்டங்கள்  எல்லையை கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் தேசிய மாணவர் படை விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

 எல்லை மாவட்டங்களில் இருந்து 1 லட்சம் தேசிய மாணவர் படைக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக மோடி தெரிவித்தார். இதில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் என கூறினார். இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த அடுத்த மறுநாளே (அதாவது நேற்று) இந்த திட்டத்திற்கு  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள 1000 பள்ளிகள், கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு  இருந்து 1 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த படையில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட உள்ள 83 என்சிசி பிரிவுகளில், 53 ராணுவம், 20 கடற்படை, 10 விமானப் படை பிரிவுகளாக மேம்படுத்தப்பட உள்ளன.

NCC-யை விரிவுபடுத்தும் இந்த திட்டத்திற்கு மாநில அரசுக உதவியுடன் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan