விமானம் தாங்கி போர் கப்பலில் உல்லாசமா?…முன்னால் பிரதமரை தாக்கிய இந்நாள் பிரதமர்… புருவம் உயர்த்தும் புதுபுது தகவல்கள்….

தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துவரும் நிலையில் பிரச்சாரம் ஒன்றில் பிரதமர் மோடி, ராஜிவ் பிரதமராக இருந்தபோது இந்திய கடற் பிராந்தியத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.என்.எஸ்.விராட்  விமானம் தங்கி போர்கப்பலை தனது சொந்த சொகுசு வாகனம்  போல பயன்படுத்தினார் என்றும், விடுமுறை தின சுற்றுலா வாகனம் போலவும்  மாற்றிவிட்டார் என சற்று காட்டமாக கூறியிருந்தார். அந்த கப்பலில் அவரது வெளி நாட்டு நண்பர்களும்  இருந்தனர் என்றும் ,பிரதமராக  இருந்த ராஜிவ்காந்தி  தேசத்தின் பாதுகாப்பின் மீது  அக்கறைப்படவில்லை என்றும், குற்றம் சாட்டியிருந்தார்.

 

Image result for ins viraat MODI

இது இந்திய அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.இது குறித்துவிளக்கம் அளித்த   முன்னாள் கடற்படை வைஸ் அட்மிரல் வினோத் பஸ்ரிச்சா இந்த தகவலை முற்றிலுமாக  மறுத்துள்ளார்.இவர் ராஜிவ் பிரதமராக இருந்தபோது, லட்சத்தீவுகளுக்கு செல்லும் போது  ஐ.என்.எஸ், விராத் கப்பலின் கேப்டனாக இருந்தவர். இவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு  பேட்டி அளித்தார்.அதில்,  அவர் கூறியதாவது, ராஜிவ் பிரதமராக இருந்தபோது அலுவல் ரீதியான  பயணமாகத் தான் போர்க்கப்பலில் சென்றார்.

 

Related image

அந்த போர்கப்பலில் அவரும் அவரது மனைவி சோனியா காந்தியை தவிர வேறு வெளிநாட்டவரோ, அவரது நண்பர்களோ அதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் அவர்,முன்னால் பிரதமர்  நேருவுடன்  ஹாங்காங் பயணம் சென்றதையும்  நினைவு கூர்ந்துள்ளார் . மேலும் கூறிய அவர் , ராணுவ ஹெலிகாப்டரில் ராஜிவும், சோனியாவும் மட்டுமே  பயணித்தனர். ராகுல் அப்போது வரவில்லை என்றும் கூரியிருந்தார்.

author avatar
Kaliraj

Leave a Comment