ரஜினியின் புது படத்தின் பெயர் நாற்காலியா….? அதிரடி பதிலளித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினி நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு ‘நாற்காலி’ இல்லை என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வெளியான படம் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. இதனையடுத்து இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், புதிய படம் நடிக்கவுள்ளார். இதற்காக தேதிதியும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “ என் அடுத்த படத்தின் தலைப்பு ‘நாற்காலி’ அல்ல. தவறான வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் இந்த ஆண்டு தொடங்கவுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment