ஸ்பெஷல் தினத்தில் ரிலீஸாகவிருக்கும் ரஜினியின் 'அண்ணாத்த'.! அடுத்த ஷூட்டிங் எப்போது தெரியுமா.?

ரஜினியின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்படும்

By ragi | Published: Aug 02, 2020 07:15 AM

ரஜினியின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்படும் என்றும், அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். மேலும் நகைச்சுவை வேடங்களில் சூரி மற்றும் சதீஷ் நடிக்கவுள்ளனர்.டி. இமான் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் தீம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் ரஜினி படத்தில் இருந்து விலகியதாக வெளியான தகவலுக்கு படக்குழுவினர் பொய் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் 50% படப்பிடிப்புகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், விரைவில் படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள ஒரு இடத்தில் பிரமாண்ட செட்டுடன் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை வரும் 2021ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Step2: Place in ads Display sections

unicc