மாஸாக ‘மாஸ்க்’ அணிந்து கார் ஒட்டி செல்லும் சூப்பர் ஸ்டார்.! வைரல் புகைப்படம் உள்ளே.!

ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தபடி கார் ஒட்டி செல்லும்படியான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. திரைப்பட ஷூட்டிங்கிற்கு அதிக வேலையாட்கள் தேவைப்படுவார்கள் என்பதாலும், திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருக்கிறது.

இதனால், சினிமா பிரபலங்கள், திரை கலைஞர்கள் என சினிமா சம்பத்தப்பட்ட ஊழியர்கள் என பெரும்பாலானோர் வீட்டில் இருந்து வருகின்றனர்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், சென்னையில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். ஊரடங்கு தொடங்கியதில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இந்நிலையில், இன்று ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில், ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தபடி கார் ஒட்டி செல்லும்படியாக இருக்கிறது. தனது பண்ணை வீட்டில் இருக்கும் ரஜினி கார் ஒட்டி எங்கு செல்கிறார் என்கிற விவரங்கள் வெளியாகவில்லை. தனது பண்ணை வீட்டை சுற்றி காரில் வலம் வந்தாரா என தகவல் வெளியாகவில்லை.

ஆனால், சூப்பர் ஸ்டாரின் மாஸ்க் புகைப்படம் மட்டும் இணையத்தில் மாஸாக வலம் வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.